தேவையான பொருட்கள் :
பாதாம் – 1/2 கப்.
முந்திரி பருப்பு – 1/2 கப்.
பிஸ்தா – 1/4 கப்.
வால்நட் – 1/2 கப் (விரும்பினால்).
பேரீட்சைப்பழம் – 25 துண்டுகள்.
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி.
செய்முறை :
முதலில் லட்டு செய்ய எடுத்துக்கொண்ட பாதாம் பருப்பை என்னை இல்லாமல் 5 நிமிடம் வறுக்கவும். இதையடுத்து, முந்திரி பருப்பு சேர்த்து 5 நிமிடம் வறுக்கவும். பிறகு பிஸ்தா பருப்பு சேர்த்து 3 நிமிடம் வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
பின்பு அதே கடாயில் வால்நட் சேர்த்து 3 நிமிடம் வறுத்து பிறகு வறுத்த பாதாம், முந்திரி, பிஸ்தா உடன் சேர்க்கவும். பிறகு கடாயில் பேரீட்சைப்பழம் சேர்த்து 2 நிமிடம் வறுத்து இறக்கவும். இப்போது, மிக்ஸி ஜாரில் வறுத்த பருப்புகளை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
பின்பு மிக்ஸியில் வறுத்த பேரீட்சைப்பழதை சேர்த்து விழுதாக அரைத்து பின்பு அரைத்த பருப்பு கலவை அதில் சேர்த்து ஒன்றாக கலக்கும் வரை அரைக்கவும். பிறகு கையில் நெய் தடவி அரைத்த கலவையை எடுத்து உருண்டைகளாக உருட்டினால் சுவையான ட்ரை ப்ரூட் லட்டு தயார். இதை மிகவும் ஆரோக்கியமானது மற்றும் சுவையானது.