தேவையான பொருட்கள்:
முட்டை – 6
காய்ச்சாத பால் – 4 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
வதக்குவதற்கு…
நெய் – 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
கேரட் – 2 (துருவியது)
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை: முதலில் ஒரு பௌலில் 6 முட்டைகளை உடைத்து ஊற்றி, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் காய்ச்சாத பால், மிளகுத் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் மற்றும் துருவிய கேரட்டை சேர்க்க வேண்டும்.
பின் அதில் மிளகுத் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். பின்னர் வதக்கியதை முட்டையுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, நீரை கொதிக்க வைக்க வேண்டும். நீர் நன்கு கொதித்ததும், இட்லி தட்டில் எண்ணெய் தடவி, அதில் முட்டை கலவையை இட்லிகளாக ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான முட்டை இட்லி தயார்.