பீரியட்ஸ் காரணமாக ஏற்படும் இரும்புச் சத்து குறைபாட்டை சரி செய்வதற்கு பெண்கள் நெல்லிக்காய் ஜாம் சாப்பிடலாம் என்று Learn என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லிக்காயானது இரும்பு சத்து மற்றும் வைட்டமின் C -இன் சிறந்த ஆதாரமாக இருப்பதால் இது இரும்புச்சத்து குறைபாட்டை சரி செய்வதற்கு பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் நெல்லிக்காயில் வைட்டமின்கள் B1, B2, B5, மற்றும் B6, மற்றும் கால்சியம் போன்றவை இருப்பதால் அது நமது ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இரும்புச்சத்து குறைபாட்டை சரி செய்வதற்கு நெல்லிக்காய் ஜாம் ஒரு சுவையான ஆப்ஷன் என்றாலும் கூட இந்த பிரச்சனையை சமாளிப்பதற்கு அது மட்டுமே போதாது என்பதையும் நீங்கள் கட்டாயமாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நெல்லிக்காய் ஜாமில் உள்ள வைட்டமின் C காரணமாக அது இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதை துரிதப்படுத்துகிறது. எனினும் அதில் உள்ள இரும்புச்சத்து அளவானது மாதவிடாய் காரணமாக இழக்கப்பட்ட இரும்புச்சத்து குறைபாட்டை ஈடு செய்யக்கூடிய அளவுக்கு இருக்காது.
பிற உணவு மூலங்கள் வழியாக நம் உடலுக்கு கிடைக்கும் இரும்பு சத்தை விரைவாக உறிஞ்சுவதற்கு உதவும் வகையில் நெல்லிக்காய் ஜாமில் வைட்டமின் C அளவு ஏராளமாக உள்ளது. ஆனால் நெல்லிக்காய் ஜாம் சாப்பிடுவதால் ஒரு சில பின்னடைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில் பிற மூலங்களை காட்டிலும் நெல்லிக்காயில் குறைந்த இரும்பு சத்து உள்ளது. மேலும் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஜாம்களில் அதிக சர்க்கரை அளவு காணப்படுவதால் கமர்ஷியல் ஜாம்களை தவிர்ப்பது நல்லது. நெல்லிக்காய் ஜாமை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது நீங்கள் பின்பற்ற வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இரும்புச்சத்து ஊட்டத்திற்காக மாதவிடாயின் பொழுது நீங்கள் நெல்லிக்காய் ஜாமை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது அதன் சர்க்கரை அளவு உட்பட ஜாமின் ஒட்டுமொத்த ஊட்டச்சத்து உள்ளடக்கத்தை கருத்தில் கொள்வது அவசியம்.
பிற இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் மூலங்களுடன் நெல்லிக்காய் ஜாம் சேர்த்து சாப்பிடுவதை உறுதிப்படுத்துங்கள். செரிமான குறைபாடுகள் அல்லது அலர்ஜி போன்றவற்றால் அவதிப்படும் நபர்கள் நெல்லிக்காய் ஜாம் சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும். நெல்லிக்காய் ஜாமுடன் சேர்த்து மெலிந்த இறைச்சிகள், பீன்ஸ், பருப்பு வகைகள், பச்சை இலை காய்கறிகள் மற்றும் தானியங்கள் போன்ற பிற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
நெல்லிக்காய் ஜாம் என்பது உங்களுடைய உணவில் ஒரு சுவையான கூடுதலாக அமைந்தாலும், மாதவிடாய் சுழற்சி சம்பந்தமான இரும்புச்சத்து குறைபாட்டை சமாளிப்பதற்கு இதை மட்டுமே நம்பி இருப்பது தவறு. இதனை சரிவிகித உணவின் ஒரு பகுதியாக பயன்படுத்துவது நல்லது. அதிலும் உணவு கட்டுப்பாடுகள் அல்லது அலர்ஜி இருப்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தனிநபர் சார்ந்த ஆலோசனைகளுக்கு சுகாதார நிபுணர் அல்லது பதிவு செய்யப்பட்ட டயட்டீசியனை அணுகுவது புத்திசாலித்தனம்.”