சென்னை : சுண்டல் கபாப் எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
கருப்பு கொண்டை கடலை – 1 கப்,
பொட்டுக்கடலை – 1/4 கப்,
சோம்பு – 1/4 ஸ்பூன்,
இஞ்சி – சிறிய துண்டு,
பூண்டு – 2 பல்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1,
கரம் மசாலா – 1/2 ஸ்பூன்,
தனியா தூள்- ஒரு ஸ்பூன்
மிளகாய்தூள்- ஒரு ஸ்பூன்
உப்பு தேவையான அளவு,
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை- தேவையான அளவு
செய்முறை: கருப்பு கொண்டை கடலையை முந்தின நாள் இரவே ஊறவைத்துக்கொள்ள வேண்டும். மறுநாள் ஊறவைத்த கொண்டை கடலையை எடுத்து அதனை குக்கரில் போட்டு வேகவைத்து எடுக்க வேண்டும். வேக வைத்த கொண்டைக்கடலையை மிக்சி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதேபோன்று பொட்டுக்கடலையையும் மிக்சி ஜாரில் போட்டு நைசாக பொடித்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் அரைத்த கொண்டைகடலை மாவு அதனுடன் பொட்டுக்கடலை மாவு சேர்க்க வேண்டும். அதன்பிறகு சோம்பு, இஞ்சி, பூண்டு, நறுக்கிய வெங்காயம், கரம் மசாலாதூள், மிளகாய்தூள், தனியாதூள், மிளகாய் தூள், உப்பு, கறிவேப்பிலை, மல்லி தழை சேர்த்து கிளர வேண்டும்.
அதனுடன் தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். இந்த உருண்டைகளை ஹார்லிக்ஸ் அல்லது பூஸ்ட் பாட்டிலின் மூடிகளில் நிரப்பி வட்ட வடிவில் தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு இந்த கபாப்களை தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி காய்ந்தது முன்னும் பின்னுமாக பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான சுண்டல் கபாப் தயார். சூடான சுண்டல் கபாப் புதினா சட்னியுடன் சாப்பிட மிகவும் ஏற்றது.