தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 1 டீஸ்பூன்
பட்டை – 1 சிறிய துண்டு
பிரியாணி இலை – 1
கிராம்பு – 4
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 3 பல்
கீரை – 3 கப் (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவைக்கேற்ப
மிளகு – தேவையான அளவு
சோள மாவு – 1 தேக்கரண்டி
குளிர்ந்த பால் – 1/2 கப்
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, கிராம்பு, பட்டை சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் கீரை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை 5-7 நிமிடம் வதக்கவும்.
பிறகு பட்டை, பிரியாணி இலை, கிராம்பு ஆகியவற்றை நீக்கி விட்டு மீதியை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் ஊற்றி சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு பாலில் கார்ன் ஃப்ளார் சேர்த்து கலந்து சூப்பில் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சுவையான கீரை சூப் ரெடி!!!