தேவையான பொருட்கள்:
2 டீஸ்பூன் கொத்தமல்லி விதை
1 டீஸ்பூன் சீரகம்
1 தேக்கரண்டி கரம் மசாலா
¼ தேக்கரண்டி மஞ்சள்
1 டீஸ்பூன் மிளகாய் தூள்
2 பல் பூண்டு
½ இன்ச் இஞ்சி
2 உலர வைத்த வெங்காயம்
1 தேக்கரண்டி மாங்காய் போடி
¼ தேக்கரண்டி மிளகு தூள்
1 தேக்கரண்டி தூள் சர்க்கரை
½ தேக்கரண்டி உப்பு
1 தேக்கரண்டி சோள மாவு
செய்முறை :
முதலில், ஒரு சிறிய கடாயில் கொத்தமல்லி விதை, சீரகம் , மிளகாய், பூண்டு, இஞ்சி,வெங்காயம் சேர்த்து நன்றாக நீர்பதம் போகும் அளவிற்கு வருது ஆறவைத்து பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள். சந்தையில் இப்பொது பூண்டுப்பொடி, இஞ்சிப்பொடி, வெங்காயப்பொடி எல்லாம் கிடைக்கிறதே அதை வாங்கி கூட பயன்படுத்தலாம்.
இந்த அரைத்த பொடியோடு 1 தேக்கரண்டி கரம் மசாலா, ¼ தேக்கரண்டி மஞ்சள், 1 தேக்கரண்டி மாங்காய் பொடி, ¼ தேக்கரண்டி மிளகு தூள், 1 தேக்கரண்டி தூள் சர்க்கரை, ½ தேக்கரண்டி உப்பு மற்றும் 1 தேக்கரண்டி சோள மாவு சேர்க்கவும். அனைத்து மசாலாப் பொருட்களும் நன்கு இணைந்திருப்பதை உறுதி செய்து நன்கு கலக்கவும். இப்பொது கடைகளில் கிடைக்கும் மசாலா போல உங்களுக்கும் சுவை கிடைக்கும்.