சென்னை: ஒரே மாதிரி உப்புமா செய்யாமல், சற்று வித்தியாசமாக ரவையுடன் முட்டைகோஸ் சேர்த்து உப்புமா செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை – 2 கப்
முட்டைகோஸ் – 1/2 கப் (நறுக்கியது)
கடுகு – 1/2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 3
கறிவேப்பிலை – சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை: முட்டைகோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும். கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும். முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி விட வேண்டும்.
அடுத்து முட்டைகோஸ் சேர்த்து, முட்டைகோஸ் வேகும் வரை மூடி வைத்து வேக வைக்க வேண்டும். பின்பு அதில் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கலந்து, நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீரானது நன்கு கொதித்ததும், அதில் வறுத்த கோதுமை ரவை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைத்து இறக்க வேண்டும். இப்போது சுவையான முட்டைகோஸ் ரவை உப்புமா ரெடி!!!