சென்னை: உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதில் வாழைப்பூவுக்கு முக்கிய இடம் உண்டு. அந்த வாழைப்பூவில் கோலா செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையானவை: வாழைப்பூ- ஒன்று (ஆய்ந்து நறுக்கவும்) கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம் – தலா அரை கப் காய்ந்த மிளகாய் – 8 சோம்பு – அரை டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை – கால் கப் நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பருப்பு வகைகளை நன்கு கழுவி ஒன்றாகச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு, தண்ணீரை நன்கு வடித்துவிட்டு காய்ந்த மிளகாய், சோம்பு, வாழைப்பூ சேர்த்துச் சிறிதளவு தண்ணீர் தெளித்து வடை மாவு பதத்துக்குக் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த கலவையும் உப்பும் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, உதிரியாக வரும் வரை கிளறி இறக்கவும்.