சென்னை: சூப்பரான சுவையில் சத்தான நட்ஸ் லட்டு எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் :
வறுத்த வேர்க்கடலை – அரை கப்
வறுத்த எள் – 1 டீஸ்பூன்
பொட்டுக்கடலை – கால் கப்
ரஸ்க் – 4
பொடித்த வெல்லம் – 100 கிராம்
பேரீச்சம் பழம் – 4 (நறுக்கவும்)
முந்திரி பருப்பு – 4 (நறுக்கவும்)
உலர்திராட்சை – 4
டூட்டிபுரூட்டி – சிறிதளவு
செய்முறை: முந்திரி பருப்பு, பேரீச்சம் பழம் ஆகியவற்றை நெய்யில் வறுத்தெடுத்துக்கொள்ளவும். வேர்க்கடலை, எள், ரஸ்க், பொட்டுக்கடலை ஆகியவற்றை மிக்சியில் போட்டு பொடித்துக்கொள்ளவும். அதனுடன் வெல்லத்தையும் கலந்து கொள்ளவும்.
இந்த கலவையுடன் நெய்யில் வறுத்தெடுத்த பேரீச்சம் பழம், முந்திரி பருப்பு, உலர் திராட்சை, ரூட்டி புரூட்டி போன்றவற்றை ஒன்றாக சேர்த்து கிளறவும். பின்னர் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து சுவைக்கலாம். சத்தான நட்ஸ் லட்டு ரெடி.