தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 3
பூண்டு – 8 பல்
வரமிளகாய் – 4
காஷ்மீரி மிளகாய் – 3
புளி – சிறிய துண்டு
உப்பு – சுவைக்கேற்ப
வெல்லம் – 2 சிறிய துண்டு
தாளிப்பதற்கு…
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, வரமிளகாய், காஷ்மீரி மிளகாய், புளி, வெல்லம் மற்றும் சிறிது உப்பு சேர்த்து ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
பிறகு அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அரைத்த சட்னியை சேர்த்து கிளறி, மூடி வைத்து, 5 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக வேக வைத்து இறக்கினால், சுவையான மதுரை ஸ்டைல் கார சட்னி தயார்.