தேவையான பொருட்கள்:
மட்டன் கறி எலும்புடன் -1/2 kg
தக்காளி பெரியது -2
சின்ன வெங்காயம் – நறுக்கியது 1 கப்
கசகசா – 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் -2 டேபிள்ஸ்பூன்
குழம்பு மசாலா பொடி -2 டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை -சிறிது
கொத்தமல்லி -சிறிது
தேங்காய் -1/2 மூடி
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
முதலில் கசகசா ,சீரகம் இரண்டையும் அம்மியில் அரைக்கவும். அம்மியில அரைத்தால் குழம்பு சுவையாக இருக்கும். பொதுவாகவே தென் மாவட்டங்களில் அசைவம் செய்யும் போது அம்மியில்தான் மசாலாவை அரைப்பார்கள்.
அதை நன்றாக அரைத்ததும் 5 சின்ன வெங்காயத்தை அதனுடன் தட்டி எடுக்கவும். கறியை நன்றாகக் கழுவி அரைத்த மசாலா , தக்காளி , இஞ்சி பூண்டு பேஸ்ட், குழம்பு மசாலாப்பொடி உப்பு போட்டு குக்கரில் 5 விசில் வரும் வரை வேக விடவும். 3. கறி நன்றாக வெந்ததும் வாணலியில் நல்லெண்ணை ஊற்றி சோம்பு ,கறிவேப்பிலை ,வெங்காயம் போட்டு தாளிக்க வேண்டும் .
பின்னர் அடுப்பை சிம்மில் வைத்து தேங்காய்ப்பால் ஊற்ற வேண்டும் . அதிகம் கொதிக்க விடக்கூடாது .எண்ணெய் தெளிந்து மேலே மிதந்தது வந்ததும் கொத்தமல்லி தலையை தூவி இறக்கவும்.
இப்போது சுவையான மதுரை மட்டன் குழம்பு ரெடி.