தேவையான பொருட்கள்
100 கிராம் அரிசி
100 கிராம் உளுந்து
ஏலக்காய் மற்றும் சர்க்கரை கலந்த தேங்காய் பால்

செய்முறை: அரிசியை ஊறவைத்து மாவு தயார் செய்யவும். சிறிது உப்பு சேர்க்கவும். எண்ணெய் ஊற்றி, மாவிலிருந்து சிறு உருண்டைகளாக்கவும். தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும். சுட்ட உருண்டைகளை தேங்காய் பாலில் போட்டு சர்க்கரை சேர்க்கவும். பாலில் ஊறிய பின் சாப்பிடவும். சுவையான பால் பணியாரம் தயார்.