தேவையான பொருட்கள்:
பச்சை அரிசி – 1/2 கப்
பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
கம்பு – 1 கப்
நெய் – சிறிதளவு
வெல்லம் – 11/2 கப்
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ் ஸ்பூன்
காய்ச்சிய பால் – 1/2 கிளாஸ்
முந்திரி பருப்பு – விருப்பப்படி
செய்முறை: கம்புவை 3 மணி நேரம் ஊறவைத்து, கரடுமுரடான விழுதாக அரைக்கவும். ஒரு கப் கம்புக்கு, மூன்று கப் தண்ணீர் சேர்க்கவும். பச்சை அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, மூன்று பங்கு தண்ணீர் ஊற்றி, பாசிப்பருப்பை சேர்த்து, கம்பு மற்றும் அரிசியை தனித்தனியாக ஒரு குக்கரில் வேகவைக்கவும். பின்னர் இரண்டையும் ஒன்றாகக் கலந்து வெல்லத்தை வேகவைக்கவும். (வெல்லம் விழுதுக்கு வெல்லத்தை வேகவைக்க வேண்டிய அவசியமில்லை. சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.) அடுப்பின் தீயை குறைத்து நன்றாகக் கிளறவும். நெய்யை ஊற்றவும். முந்திரி பருப்பை நெய்யில் வறுக்கவும். பால் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறவும். சுவையான கம்பு பொங்கல் தயார்.