வத்தக் குழம்பு மற்றும் காரக்குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால் கவலை வேண்டாம். சிறிது தக்காளியை எடுத்து மிக்சியில் அரைத்து ஊற்றுங்கள். காரம் குறைவதுடன் தக்காளி வாசனையுடன் நிறமும், மணமும் ஜோராக இருக்கும். தக்காளி சீக்கிரமாக வதங்க சிறிது சர்க்கரையையும், வெங்காயத்திற்கு உப்பையும் சேர்க்க வேண்டும்.
திதி போன்ற நாட்களில் அரிசி ரவை பாயசம் செய்யும் போது சாதா ரவைக்கு பதில் பாஸ்மதி அரிசியை ரவையாக உடைத்து வேகவைத்து வெல்லம், தேங்காய், பால்விட்டு செய்து பாருங்கள் கம கம என மணமுடன் சுவையும் கூடுதலாகி நன்றாக இருக்கும்.
ரவா தோசை செய்யும்போது’ இரண்டு ஸ்பூன் சோளமாவு சேர்த்து செய்து பாருங்கள். தோசை நன்றாக இருப்பதோடு உடம்புக்கு நல்லது.
இட்லி பொடி செய்யும் போது சிறிது கருவேப்பிலையும் போட்டு மிக்ஸியில் அரைத்தால் மணமாக இருக்கும். நெய் சேர்த்து கிரேவி செய்வதற்கு பதிலாக வெண்ணெய் சேர்த்து செய்தால் மணமும் சுவையும் அபாரமாக இருக்கும்.