சென்னை: சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ள அருமையான சுவையில் சின்ன வெங்காயம் துவையல் செய்வது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 200 கிராம்,
காய்ந்த மிளகாய் – 3,
உளுத்தம்பருப்பு – 4 டீஸ்பூன்,
புளி – சிறிதளவு,
எண்ணெய் – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி எடுத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றியவுடன் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை தனியாக வறுத்து எடுத்து கொள்ளவும். அதன்பின்பு, மிக்சிஜாரை எடுத்து அதில் வதக்கிய வெங்காயம், வறுத்து எடுத்த காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, உப்பு மற்றும் புளி சேர்த்து நன்கு அரைத்து எடுத்தால் வெங்காய துவையல் ரெடி.
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து அதில் ஊற்றவும். இந்த துவையல் தோசை, சப்பாத்திக்கு சிறந்த டிஸ்ஸாக எடுத்து கொள்ளலாம்.