தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு
வெங்காயம் வடகம் – 6 துண்டுகள்
வெங்காயம் – 10 (உரித்தது)
மல்லி தூள் – 3 மேசைக்கரண்டி
வெல்லம் – ஒரு சிறிய துண்டு
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 6 பல் (உரித்தது)
தக்காளி – 1 (நறுக்கியது)
மஞ்சள் பூசணி – 2 கப் (நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – ருசிக்கேற்ப
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து 1-2 நிமிடங்கள் வதக்கவும். பின்னர் அதில் தக்காளி மற்றும் பூசணிக்காயை சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்து மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு தூவி கிளறவும். பிறகு அதில் புளி தண்ணீர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி 10 நிமிடம் குறைந்த தீயில் நன்கு கொதிக்க விடவும். அதன் பிறகு வெல்லம் சேர்த்து கிளறினால் சுவையான பூசணிக்காய் புளிக்கொழம்பு ரெடி.