சென்னை: குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மாம்பழ கேசரி எப்படி சமைப்பது என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாக வீட்டில் மாம்பழ மில்க்க்ஷேக், அல்வா, ஐஸ்கிரீம், பர்பி என பல உணவு வகைகளிலும் செய்திருப்பீர்கள். ஆனால், மாம்பழ கேசரி எவ்வாறு செய்யலாம் என்ற புதிய ரெசிபியை இன்று செய்து அசத்துங்கள்
தேவையான பொருட்கள் :
நெய் – 150 மி.லி
ஏலக்காய் -2
தண்ணீர் – 750 மில்லி
முந்திரி – தேவைக்கு ஏற்ப
சர்க்கரை – 75 கிராம்
மாம்பழம் – 1
ரவை – 250 கிராம்
செய்முறை : முதலில் ஒரு மாம்பழத்தின் தோலை நீக்கி நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். பின் சிறிய பாத்திரத்தில் நெய் ஊற்றி உருகியதும், முந்திரி போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக வறுக்கவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, ரவையை கொட்டி பொன்னிறமாக வறுக்க வேண்டும். தொடர்ந்து அடி கனமான வாணலியில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து, அதில் வறுத்த ரவையை சேர்த்து கிளற வேண்டும்.
பின் ரவை பாதியளவு வெந்ததும் மாம்பழம் மற்றும் சர்க்கரை கலந்து கேசரி பதம் வரும் வரை கிளற வேண்டும். இறுதியாக மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி முந்திரியை வறுத்து மேலே தூவி அலங்கரித்தால் மாம்பழ கேசரி தயாராகிவிடும்.