சென்னை: சாப்பாட்டுக்கு அருமையான சைட் டிஷ் வேணுங்களா. அதுவும் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கணுமா. அப்போ கதம்ப காய்கறபொறியல் செய்து பாருங்கள்.
தேவையான பொருள்கள்:
காலி பிளவர் – 100 கிராம்,
கேரட் – 1,
பீட்ரூட் – 1,
முள்ளங்கி – 1,
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி,
மிளகுத்தூள் – 1 தே.கரண்டி,
மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி,
தேங்காய் துருவல் – 2 மேஜை கரண்டி,
உப்பு – தேவையான அளவு.
கதம்ப காய்கறி தாளிக்க:
எண்ணெய் – 4 மேஜை கரண்டி,
கடுகு – 1/2 தே.கரண்டி,
உளுந்தம்பருப்பு – 1/2 தே.கரண்டி,
பெரிய வெங்காயம் – 1,
கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை: முதலில் எடுத்துக்கொண்ட காலிபிளவரை சூடான நீரில் 5 நிமிடம் வேகவைத்து எடுக்க வேண்டும். பின்னர் வெங்கியம் மற்றும் காலிபிளவரை பொடிப்பொடியாக நறுக்க வேண்டும்.
எடுத்துக்கொண்ட கேரட், பீட்ரூட், முள்ளங்கி போன்றவற்றை தோல் சீவி நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
வானலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் உளுந்து சேர்த்து, பின்னர் கறிவேப்பில்லை, வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்கியதும் காலிப்ளவர், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வேகவைத்து, பின்னர் மிளகாய் தூள் மற்றும் மிளகுத்தூள், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து கிளறினால் கதம்ப பொரியல் தயார்.