சென்னை: உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகரித்து தரும் சுறா மீன் புட்டு செய்முறை உங்களுக்காக. இதை செய்து கொடுத்து பாருங்கள். உங்கள் குடும்பத்தினர் அன்று முழுவதும் உங்களை பாராட்டிக் கொண்டே இருப்பார்கள்.
தேவையான பொருட்கள்
சுறா மீன் – 1/4 கிலோ
சீரகத்தூள் – 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 1/4 கிலோ
இஞ்சி பூண்டு விழுது – ஒரு மேஜைக் கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
தக்காளி – 1
கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து
கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய் துருவல் – கால் கோப்பை
எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை: சுறா மீனை வேக வைத்து எடுத்து, உதிர்த்துக் கொள்ள வேண்டும். அதில் சிறிது உப்பு, சீரகத்தூள், பச்சை மிளகாய், மஞ்சள் தூள் எல்லாம் சேர்த்து பிசறி வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும்.
பிறகு தக்காளி, மிளகாய்த் தூளை சேர்த்து வதக்கவும். இப்போது உதிர்த்து வைத்துள்ள மீனையும் சேர்த்து நன்கு கிளறி இரண்டு நிமிடம் வேகவிட வேண்டும். கடைசியாக தேங்காய் துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி இறக்கவும். அருமையான சுவையில் சுறாமீன் புட்டு ரெடி.