தேவையான பொருட்கள்:
இட்லி மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 3 தேக்கரண்டி
உதிராக வடித்த சாதம் – 2 கப்
கடுகு – 1/2 தேக்கரண்டி
பூண்டு – 4 பல்
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு.
எண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்முறை: பூண்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கி சாதத்தில் ஊற்றி கிளறவும். மேலும் இட்லி மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, சிறிது உப்பு சேர்த்து பரிமாறவும்.