தேவையான பொருள்கள் :
துளசி இலை
மிளகு
புளி
கடுகு
எண்ணெய்
உப்பு
.துவரம் பருப்பு
தனியா
சீரகம்
செய்முறை :
முதலில் மிளகு, சீரகம், தனியா, துவரம் பருப்பை ஊற வைக்கவும். புளியை மண் இல்லாமல் நன்றாகக் கரைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். அப்படியே மறுபக்கத்தில் துளசி இலைகளை நன்றாக அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும்.. பின்னர் ஊற வைத்த பொருட்களை மிக்சியில் அரைத்துப் புளிக் கலவையுடன் சேர்க்கவும்.
இப்போது ஒரு கொதி வந்த மாத்திரத்தில் துளசியையும் அரைத்து மேற்கண்ட புளிக் கலவையுடன் சேர்த்து நுரைத்ததும் இறக்கி வைக்கவும். பின்னர் எண்ணெய்யில் கடுகையும் தாளித்து அதில் கொட்டிக் கலக்கவும். இதோ இப்போது சுவையான துளசி ரசம் தயார். இது இருமல், சளிக்கு நல்ல மருந்தாக இருக்கும். முக்கியமாக குழந்தைகளுகு ஏற்ற ரசமாகும்.. இருமல், சளி ஆகிய இவற்றை கட்டுப்படுத்தி தேவை இல்லாத கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்ற துளசி ரசம் உதவுகிறது.