April 28, 2024

கணவரின் பதிவுக்கு பதில் பதிவு போட்ட நடிகை நயன்தாரா… இணையத்தில் வைரல்

சென்னை: கணவர் விக்னேஷ்சிவன் பதிவுக்கு நடிகை நயன்தாரா இன்று இணைய தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விக்னேஷ் – நயன்தாரா ஜோடியாக கட்டிப்பிடித்து அன்போடு தழுவும் படங்கள், இரட்டை குழந்தைகளை பாசத்துடன் கொஞ்சுவது போன்ற படங்களைப் பகிர்ந்துள்ளார்.

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இது காதல், நகைச்சுவை திரைப்படமாகும். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை ‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ’ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் மற்றும் விக்னேஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில வாரங்களாக மலேசியா மற்றும் சிங்கப்பூரில் நடந்தது. இந்நிலையில் நயன்தாரா 2 மகன்களை கையில் வைத்திருக்கும் புகைப்படங்களையும், நயன்தாரா அவர்களுடன் விளையாடும் புகைப்படங்களையும் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பதிவில் விக்னேஷ் நேற்று பகிர்ந்தார்.

“படப்பிடிப்பு பணிகள் காரணமாக வாரக்கணக்கில் குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்து இருக்கிறேன்”. தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதை தவறவிட்டேன். விரைவில் தனது அன்பு குழந்தைகள், மனைவி நயன்தாராவை அரவணைக்க காத்திருக்கிறேன்” என குடும்பத்தை பிரிந்த ஏக்கத்தில் அவ்வாறு விக்னேஷ் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா இன்று இணைய தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விக்னேஷ் – நயன்தாரா ஜோடியாக கட்டிப்பிடித்து அன்போடு தழுவும் படங்கள், இரட்டை குழந்தைகளை பாசத்துடன் கொஞ்சுவது போன்ற படங்களைப் பகிர்ந்துள்ளார்.

நயன்தாரா வெளியிட்டுள்ள இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. படப்பிடிப்பிற்காக வீட்டை விட்டு பிரிந்து சென்ற கணவர் மீது நயன்தாரா தனது காதலை அதில் வெளிப்படுத்தி உள்ளார். நயன்தாரா இணையத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

‘சிங்கப்பூரில் இருந்து 20 நாட்களுக்குப் பிறகு திரும்பிய உங்களை ( விக்னேஷ்) பார்த்தபோது நாங்கள் மூவரும் எப்படி உணர்ந்தோம் என்பதை விளக்க முடியவில்லை. நாங்கள் உங்களை மிகவும் தவறவிட்டோம். நான் உங்களை நேசிக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!