June 25, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிப்பு

சென்னை ; விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக சார்பில் அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ‘சி.அன்புமணி என்பவர் பாமக சார்பில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் போட்டிடுவார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் வன்னியர் சங்க நிர்வாகி மற்றும் பாமக மாநில துணை தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில், விக்கிரவாண்டி தொகுதி தேர்தலில் இவர் போட்டியிட்டு தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

2016ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாமக தனித்து களம் கண்டபோது, விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்ட சி. அன்புமணி சுமார் 41,428 வாக்குகளை பெற்றார். அதாவது அந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 23.19 சதவிகித வாக்குகளை இவர் பெற்று இருந்தார். இந்நிலையில் தான் விக்கிரவாண்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட, சி. அன்புமணிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!