May 13, 2024

ஆர்ச்சருக்கு முழங்கை அறுவை சிகிச்சை; காயத்தில் இருந்து மீண்ட பேர்ஸ்டோவ் 97 ரன்கள் எடுத்தார்!

இங்கிலாந்து மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் சிறிய முழங்கை அறுவை சிகிச்சைக்காக பெல்ஜியம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் மற்றொரு இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ காயத்தில் இருந்து மீண்டு 88 பந்துகளில் 97 ரன்கள் குவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆர்ச்சர் 2 போட்டிகளில் விளையாடி 1 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். இந்நிலையில் அவர் தனது வலது முழங்கையில் சிறிய அறுவை சிகிச்சை செய்ய பெல்ஜியம் சென்றதாக தெரிகிறது. எதிர்வரும் 30ஆம் திகதி ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் மீண்டும் களம் இறங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பரில் கோல்ஃப் விளையாடியபோது காயம் அடைந்த இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ, காயத்தில் இருந்து மீண்டதாக தெரிகிறது. வரும் ஆஷஸ் தொடரில் உடல்தகுதியுடன் இருக்க உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு, நாட்டிங்ஹாம்ஷயர் அணிக்கு எதிராக யார்க்ஷயரின் இரண்டாவது லெவன் அணிக்காக 88 பந்துகளில் 97 ரன்கள் எடுத்தார். இதில் 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!