May 3, 2024

சுக்கு சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா ?

செரிமானத்துக்கு, இஞ்சியை விட சுக்கு மிகவும் நல்லது.. அஜீரண கோளாறு இருப்பவர்கள், சுக்கு + துளசி இலை சேர்த்து மென்று விழுங்கினாலே, அஜீரணம் நீங்கிவிடும்.. வாந்தி, குமட்டலும் நின்றுவிடும். அதனால்தான், மந்தமாக இருக்கும் குழந்தைகளுக்கு சிறிதளவு சுக்கை அரைத்து தருவார்கள்.. இதனால், குழந்தைகளுக்கு பசியும் நன்றாக எடுக்கும். பித்த வாந்தி இருந்தாலும், சுக்குத்தூளை தேனுடன் கலந்து சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும்.

தலைபாரம், தலையில் நீர் கோர்த்திருந்தால், சுக்குடன் பெருங்காய தூளை சேர்த்து தலையில் தடவினால் நிவாரணம் கிடைக்கும். காரணம், தலையிலிருக்கும் நீரை, இந்த சுக்கு உறிஞ்சிவிடும்.மலச்சிக்கல் இருப்பவர்கள், சுக்குடன், சின்ன வெங்காயத்தை அரைத்து சாப்பிட்டாலே போதும்.. கழிவுகள், நச்சுகள் வெளியேறி, குடல் சுத்தமாகிவிடும்.. அதேபோல, சுக்குடன் சின்ன வெங்காயத்தை அரைத்து சாப்பிட்டால் வயிற்றிலுள்ள கிருமிகள்அழியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!