May 19, 2024

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடம் தெரியுமா?

ஒட்டாவா: உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் 3 இடங்களை பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் ஆண்டுதோறும் உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் தனிநபர் வருமானம், சமூக ஆதரவு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இந்த ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கனேடிய பொருளாதார நிபுணர்களான ஜான் எஃப். ஹெல்லிவெல், ரிச்சர்ட் லயார்ட், ஜெஃப்ரி சாக்ஸ், ஜேன் இமானுவேல் டி நெவ், லாரா பி. அகினின் மற்றும் ஷன் வாங் ஆகியோரால் வெளியிடப்பட்டது.

இந்தப் பட்டியலில் பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. மொத்தம் 143 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், தலிபான்களால் நடத்தப்படும் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா 126-வது இடத்தில் உள்ளது. உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் கடந்த 10 ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வருகிறது.

அமெரிக்காவும் ஜெர்மனியும் பொதுவாக முதல் 20 இடங்களில் இருக்கும். இருப்பினும், இந்த ஆண்டு முதல் 20 இடங்களில் இந்த இரு நாடுகளும் இடம்பெறவில்லை. அமெரிக்கா 23-வது இடத்திலும், ஜெர்மனி 24-வது இடத்திலும் உள்ளன. கோஸ்டாரிகா (12), குவைத் (13) ஆகியவை முதல் 20 நாடுகளில் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!