May 19, 2024

2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்துள்ளது

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 2 நாட்களாக சவரனுக்கு ரூ.920 குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பு நகை வாங்குபவர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இப்படி உயர்ந்து ஏப்ரல் 19-ம் தேதி சவரன் ரூ.55 ஆயிரத்தை தொட்டது. இதனால், நடுத்தர மக்கள் மற்றும் ஏழை, எளிய மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் நேற்று ஒரு கிராம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.6,615 ஆகவும், சவரன் விலை ரூ.800 குறைந்து ரூ.52,920 ஆகவும் இருந்தது.

இந்த அதிரடி விலை குறைப்பு நகை வாங்குபவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்றும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,600 ஆகவும், தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,800 ஆகவும் இருந்தது. தொடர்ந்து 2 நாட்களாக தங்கம் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.920 குறைந்துள்ளது.

இந்த விலை சரிவு நகை வாங்குபவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் சந்தைக்கு விடுமுறை. எனவே, தங்கம் விலையில் என்ன மாற்றம் வரும் என்பது நாளை (திங்கட்கிழமை) சந்தை துவங்கிய பிறகே தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!