May 11, 2024

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு..!!

சென்னை: இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரின் எதிரொலியாக தங்கத்தின் விலை உயர்ந்து, நவம்பர் 29-ம் தேதி ஒரு பவுன் ரூ.46,960 என்ற புதிய உச்சத்தை எட்டியது.

அதன் பின்னர் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று தங்கம் பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதன்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,825-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் சுத்த தங்கம் ஒரு பவுன் ரூ.50,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதே சமயம் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.80.70 ஆகவும், வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ரூ.80,700 ஆகவும் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!