May 2, 2024

புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை… ரூ.360 உயர்ந்து ஒரு பவுன் ரூ.52,360-க்கு விற்பனை

சென்னை: சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி தங்கம் விலையில் ஒரு பவுன் ரூ.42,280 ஆகக் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டது. இதன்பிறகு, இஸ்ரேல்-பாலஸ்தீன தாக்குதலுக்கு பதிலடியாக அதிகரித்த தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து, டிசம்பர் 4-ம் தேதி பவுன் ரூ.47,800 என்ற புதிய உச்சத்தை எட்டியது.

அதன்பின், விலை ஏற்றம், இறக்கம் என இருந்த நிலையில், கடந்த மாதம் திடீரென உயரத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஏறுமுகமாகவே இருந்தது. கடந்த மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.50,000ஐ தொட்டது குறிப்பிடத்தக்கது.

மறுநாள் (மார்ச் 29) ரூ.51,120 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கம் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி பவுனுக்கு ரூ.51,640 ஆகவும், ஏப்ரல் 3-ம் தேதி பவுனுக்கு ரூ.52,000 ஆகவும் புதிய உச்சத்தை எட்டியது. இந்நிலையில், நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.45 உயர்ந்து, பவுனுக்கு ரூ.360 ஆக உயர்ந்தது.

இதனால் இதுவரை இல்லாத வகையில் ஒரு கிராம் ரூ.6,545 ஆகவும், பவுன் ரூ.52,360 ஆகவும் உயர்ந்துள்ளது. 24 காரட் தூய தங்கம் ஒரு கிராம் ரூ.7,015-க்கும், ஒரு பவுன் ரூ.56,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே சமயம் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

வெள்ளியின் விலை நேற்று கிராமுக்கு ரூ.84 ஆகவும், கிலோ ரூ.84,000 ஆகவும் நீடித்தது. நாளுக்கு நாள் தங்கம் விலை உயர்ந்து வருவது நடுத்தர மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் கூறுகையில், ”வெளிநாடுகளில் பொருளாதார பணவீக்கம், சர்வதேச அளவில் தங்கத்திற்கான தேவை, தங்கத்தின் மீதான முதலீட்டாளர்களின் கவனம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு பவுன் தங்கம் ரூ.60,000 ஆக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!