May 21, 2024

நெத்திலி கருவாடு தொக்கு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் நெத்திலி – 100 கிராம், தக்காளி – 4, வெங்காயம் – 100 கிராம், பூண்டு – 10 பல், பச்சை மிளகாய் – 1, இஞ்சி பூண்டு – 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன், மிளகாய் தூள் – 4 டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு டீஸ்பூன், நெய் – 3 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு .

செய்முறை:

* கருவாட்டை இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக சுத்தம் செய்யவும். * தக்காளி, வெங்காயம், மிளகாய், பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். * கடாயை அடுப்பில் வைத்து ஆலிவ் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து பூண்டு, வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் பொன்னிறமானதும், நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். * இஞ்சியின் பச்சை வாசனை போனதும் தக்காளியைப் போட்டு வதக்கவும். * அடுத்து மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

* மசாலாவில் பச்சை வாசனை போனதும் கருவாட்டை  சேர்த்து கிளறவும். * சிறிது தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். * குழம்பு கெட்டியானதும், இறுதியாக சிறிது கறிவேப்பிலை சேர்த்து வேக வைக்கவும். * இப்போது சூப்பர் நெத்திலி கருவாடு ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!