May 21, 2024

சூப்பர் ஸ்நாக்ஸ் ஆலு ப்ரெட் பிங்கர்ஸ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் வெங்காயம் – ,1 ரொட்டி – 6 துண்டுகள், உருளைக்கிழங்கு – 1/4 கிலோ, பன்னீர் – 100 கிராம் துருவியது, சீஸ் – விருப்பத்திற்கு ஏற்ப, மிளகாய் – 3, இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி, மிளகு தூள் – 1 /4 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், கொத்தமல்லி – ஒரு சிட்டிகை, ஓரிகானோ – 1 தேக்கரண்டி, சோள மாவு – கால் கப் பிரட் பவுடர், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை ப. மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பன்னீரை துருவிக்கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசிக்கவும். சோள மாவுடன் 1 டீஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ், சிறிது உப்பு, ஆர்கனோ, சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியான பேஸ்டாகக் கரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், மிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள், தனியா தூள், மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். அடுத்து அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். அடுத்து துருவிய பன்னீர் மற்றும் கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். எல்லாம் ஒன்றாக வந்ததும் துருவிய சீஸ் சேர்த்து வதக்கவும்.

அனைத்து மசாலாக்களும் சேர்ந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். இந்த மசாலாவை ரொட்டியின் மேல் பரப்பவும். பின்னர் மசாலா ரொட்டியை நீண்ட துண்டுகளாக வெட்டவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, வெட்டிய ப்ரெட் துண்டுகளை சோள மாவு கலவையில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இப்போது சூப்பர் ஆலூ ப்ரெட் ஃபிங்கர்ஸ் ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!