May 19, 2024

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரிவால்வர் ரீடா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

சென்னை: 2022-ம் ஆண்டு கீர்த்தி சுரேஷின் ‘சாணிக் காயிதம்’, ‘சர்க்காரு வாரி பாட்டா’, ‘வாஷி’ உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

இதில் ‘சாணிக் காயிதம்’ படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு பாராட்டப்பட்டது. அதன் பிறகு கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நானியுடன் ‘தசரா’ படத்திலும், தமிழில் உதயநிதியுடன் ‘மாமன்னன்’ படத்திலும் நடித்தார்.

இதன் பிறகு இவர் நடிப்பில் திரைக்கு வர காத்திருக்கும் படங்களில் ஒன்று ‘ரிவால்வர் ரீடா’. சந்துரு இயக்கியுள்ள இப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் இணைந்து தயாரித்துள்ளனர்.

தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்யவுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!