May 11, 2024

புதுச்சேரி கடலில் மீனவர் வலையில் சிக்கிய பெருமாள் சிலை

புதுச்சேரி:

புதுவை சின்ன காலாப்பட்டை சேர்ந்த ராமச்சந்திரன் தலைமையில், அவரது மகன்கள் ராபின், ராபர்ட் ஆகியோர் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.

கடலில் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் வலை வீசியபோது பெருமாள் சிலை ஒன்று சிக்கியது.

ஒன்றரை அடி அகலமும், அரை அடி நீளமும் கொண்ட பெருமாளின் தலை மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த சிலை பஞ்சாயத்து வசம் ஒப்படைக்கப்பட்டது.

சிலையை காண அப்பகுதி மக்கள் சென்றனர். தகவலறிந்து காலாப்பட்டை போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து அந்த சிலையை பஞ்சாயத்து போலீசார் போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த வயதான மீனவர் ஒருவர் கூறியதாவது:-

தங்கள் முன்னோர்கள் வழிபட்ட பெருமாள் கோவில் கடலில் இருப்பதாகவும், சங்கு எடுக்க கடலில் இறங்கியவர்கள் பார்த்த குதிரையுடன் கூடிய பெருமாள் சிலை இருப்பதாகவும் கூறினார்.

கண்டெடுக்கப்பட்ட சிலை மூலம் தங்களது முன்னோர்கள், முன்னோர்கள் வழிபட்ட பெருமாள் கோயில் கடலுக்கு அடியில் இருப்பதை உறுதி செய்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!