ஆஸ்திரேலியா: உலக பவுல்ஸ் சாம்பியன் ஆஃப் சாம்பியன்ஸ் போட்டியில் இந்திய வீரர் புதுல் சோனோவால் அரையிறுதிக்கு முன்னேறி, இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை உறுதி செய்துள்ளதாக அகில இந்திய வானொலி வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 43 வயதான புதுல் சோனோவால், ஆடவர் ஒற்றையர் பிரிவில் சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
சிங்கப்பூரின் ஹாரிமன் யுவெனை வீழ்த்தியதன் மூலம் அவர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் கிரிக்கெட், ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகள் பரவலாக அறியப்பட்டுள்ள நிலையில், பவுல்ஸ் போன்ற விளையாட்டுகளில் சர்வதேச அளவில் இந்திய வீரர்கள் சாதிப்பது கூடுதல் கவனத்தை ஈர்க்கிறது.
