தஞ்சை: மாநில அளவிலான பார்வைத் திறன் குறைபாடு உடையவருக்கான முதலமைச்சர் கோப்பை போட்டியில் தங்கம் வென்று பள்ளி திரும்பிய மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கான முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டிகள் தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வந்தது. இதில் மாநிலம் முழுவதிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
இதில் தஞ்சை பார்வைத் திறன் குறைபாடு உடையவர்களுக்கான அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் தஞ்சையில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் நேற்று சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான வாலிபால் போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள் ஏழு பேர் முதல் பரிசு பெற்று தங்கம் வென்று பள்ளி திரும்பினர்.
பள்ளி வந்த மாணவிகளுக்கு பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பட்டாசு வெடித்து பூங்கொத்து கொடுத்து இனிப்பு வழங்கி முற்றாக வரவேற்பு அளித்தனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் தலா 75 ஆயிரம் அரசு சார்பில் செலுத்தப்பட்டுள்ளது.