ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்க வைக்கலாம் என ஆலோசித்து வருகிறது. வரும் ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் துபாயில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஐபிஎல்லில் 10 அணிகள் உள்ளன, ஒவ்வொரு அணியும் தங்களின் 5 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். முந்தைய மெகா ஏலங்களில் 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளவும், 2 ஆர்டிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி 2 வீரர்களை வாங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.
இருப்பினும், முதல் 5 வீரர்களை மட்டுமே தக்கவைக்க அனுமதிக்கப்படும் என்றும், ஆர்டிஎம் கார்டு முறை ரத்து செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் அணிகள் தங்கள் முக்கிய வீரர்களைப் பாதுகாப்பதில் கடுமையான முடிவுகளை எடுப்பதாகத் தெரிகிறது. எதிர்காலத்திற்கான சிறந்த அணிகளை உருவாக்க எந்த வீரர்களை பாதுகாக்க வேண்டும் என்பது பற்றிய விவாதங்கள் முன்னணியில் உள்ளன.