இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. கர்நாடகாவைச் சேர்ந்த ராபின், 2007 ஆம் ஆண்டின் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் விளையாடியவர்.
இதைத் தொடர்ந்து, இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் களமிறங்கிய ராபின், ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்காக விளையாடினார்.இந்நிலையில், உத்தப்பா தற்போது சென்டாரஸ் லைஃப்ஸ்டைல் பிரைவேட் லிமிடெட் என்ற ஆடை நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.
அந்த நிறுவனம், ஊழியர்களிடமிருந்து வசூலித்த சுமார் ரூ.24 லட்சம் பணத்தை வருங்கால வைப்பு நிதி (EPF) ஆணையத்தில் செலுத்தவில்லை என புகார் உள்ளது. இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறக்கப்பட்டுள்ளது.
நேற்று (டிசம்பர் 4) அந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, அவர் தற்போது துபாயில் உள்ளார். உத்தப்பா, 27 ஆம் தேதிக்குள் பணத்தை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தவறினால், அவர் கைது செய்யப்படலாம் என authorities எச்சரிக்கை விடுத்துள்ளனர்.