சிட்னி: சிட்னியில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மேத்யூ ஷார்ட் 32, ஆரோன் ஹார்டி 28, கிளென் மேக்ஸ்வெல் 21, ஜேக் பிரேசர்-மெக்கர்க் 20 ரன்கள் எடுத்தனர். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 3.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் குவித்திருந்தது.
ஆனால் அதன் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் ரன் குவிப்பு தேக்கமடைந்தது. பாகிஸ்தான் அணி சார்பில் ஹரிஸ் ரவூப் 4 விக்கெட்டுகளையும், அப்பாஸ் அப்ரிடி 3 விக்கெட்டுகளையும், சுபியான் முகீம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 148 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 134 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
உஸ்மான் கான் 52 ரன்களும், இர்பான் கான் 37 ரன்களும் எடுத்தனர். முகமது ரிஸ்வான் 16, பாபர் ஆசம் 3, சாஹிப்சாதா ஃபர்ஹான் 5, சல்மான் ஆகா 0 ரன் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்பென்சர் ஜான்சன் 5 விக்கெட்டுகளையும், ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.
முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி மற்றும் 3-வது போட்டி நாளை ஹோபர்ட்டில் நடக்கிறது.