கொழும்பு: மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் அணி பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் நேற்றைய போட்டியில் வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 38.3 ஓவரில் 129 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வங்கதேசம் சார்பில் ஷோமா அக்தர் 3 விக்கெட்டும், மரூபா அக்தர், நஹிதா அக்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.இதையடுத்து 130 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ரூபியா ஹெய்டர் அரை சதம் கடந்து 54 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், வங்கதேசம் அணி 31.3 ஓவரில் 131 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.