கராச்சி : கராச்சி மைதானத்தில் இன்று மதியம் சாம்பியன்ஸ் டிராபி திருவிழா தொடங்குகிறது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. கராச்சி மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
நடப்பாண்டு CT தொடரை பாகிஸ்தான் நடத்தும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடத்தப்படவுள்ளது. இன்று முதல் மார்ச் 9 வரை CT தொடர் நடைபெறவுள்ளது.