மும்பை: சிறந்த வீரர் ஆவாரா ஷ்ரேயஸ் ஐயர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஆழமாக எழுந்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து ஐசிசி கவுரவித்து வருகிறது. அதில், மார்ச் மாதத்திற்கான பரிந்துரை பட்டியல் வெளியாகியிருக்கிறது.
இதில், இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர், நியூசிலாந்து வீரர்கள் ஜேக்கப் டஃபி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். வீராங்கனைகளுக்கான பட்டியலில் அமெரிக்காவின் சேத்னா பிரசாத், ஆஸ்திரேலியாவின் அனபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வோல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பரிந்துரை பட்டியலில் இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர் இடம் பிடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் விருப்பமாகவும் உள்ளது.
தன் பங்கேற்கும் போட்டியில் அனைத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறார் ஷ்ரேயஸ் ஐயர் என்பதும் குறிப்பிடத்தக்கது.