புதுடில்லி: ஆர்க்ல போட்டா பார்க்ல அடிப்பேன்டா இந்த ஆறுச்சாமி என்று மீம்ஸ் போட்டு துபேவை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.
உலக கோப்பை டி20 2026 லீக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சூப்பர் 8க்கு ஏற்கனவே 8 அணிகள் தேர்வான நிலையில் மீதமுள்ள லீக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
அதில், நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இப்போட்டியில் அதிரடியாக ஆடிய சிவம் துபே 31 பந்துகளில் 66 ரன்களையும் 2 விக்கெட்டுகளையும் எடுத்து ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றினார்.
தற்போது சிவம் துபேவை சிஎஸ்கே ரசிகர்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் கொண்டாடும் விதமாக மீம்ஸ்களை பகிர்ந்து வருகிறார்கள்.