சென்னை : சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளை பார்ப்பதற்காக செல்லும் சென்னை அணியின் ரசிகர்களுக்கு மாநகர பஸ்களில் கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும்போது, போட்டியை காணச் செல்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்க ஏற்பாடு செய்யப்படும். தற்போது மாநகர பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
போட்டிக்கான டிக்கெட்டை வைத்து, போட்டி தொடங்குவதற்கு 3 மணிநேரத்திற்கு முன்பு மட்டுமே பேருந்துகளில் (NON AC) பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சென்னை அணி ரசிகர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மெட்ரோ ரயில் மட்டுமின்றி மாநகரப் பேருந்துகளிலும் கிரிக்கெட் போட்டியை காண செல்லும்பொழுது கட்டணம் இல்லை என்பது அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. .
ஆனால் போட்டிக்கான டிக்கெட்டை எடுத்தவர்கள் மட்டுமே இலவச பயணம் மேற்கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.