லார்ட்ஸ்: நிதானமான ஆட்டத்தில் இந்தியா உள்ளது. கே.எல்.ராகுல் அரை சதம் அடித்துள்ளார். இந்தியா – இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் லார்ட்சில் நடைபெற்று வருகிறது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பின்பு ஆடிய இந்திய அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 145 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 53 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்துக்கு எதிராக தான் எடுத்த விக்கெட்டை கார் விபத்தில் பலியான போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியாகோ ஜோட்டாவுக்கு சிராஜ் சமர்பித்தார். ஜேமி ஸ்மித்தின் விக்கெட்டை எடுத்த பிறகு, டியாகோ கோல் அடித்த பின் கொண்டாடும் ஸ்டைலை சிராஜ் செய்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
இது லார்ட்ஸில் இருந்து ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.