புதுடில்லி: சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் இந்திய அணி இலங்கையை எதிர்கொள்கிறது.
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் இந்திய அணி, இலங்கை அணியை எதிர்கொள்கிறது.
இந்தத் தொடரில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மே.இ.தீவுகளை சேர்ந்த முன்னாள் வீரர்கள் பங்கேற்கின்றனர். குறிப்பாக, 14 வருடங்களுக்குப் பிறகு சச்சின், யுவராஜ் இணைந்து விளையாடவுள்ளதால், போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.