புதுடெல்லி: ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கிய தென்னாப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் டாப் 5 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துள்ளார்.
அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் போனவர் தென்னாப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ். ‘மிஸ்டர் 360’ என ரசிகர்கள் அவரை செல்லமாக அழைக்கின்றனர்.
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கிய 5 வீரர்களை அவர் தேர்வு செய்துள்ளார். அதில் தோனி, விராட் கோலி, சச்சின் ஆகிய மூன்று இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதை தவிர ரிக்கி பாண்டிங், ஜாக் காலிஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். டிவில்லியர்சின் இந்த தேர்வு பட்டியல் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.