வாஷிங்டன்: உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து விலகுவதாக மேக்னஸ் கார்ல்சன் அறிவித்துள்ளார். இந்தப் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நார்வே கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன் கலந்து கொண்டார். ரேபிட் பிரிவில் 5 முறையும், பிளிட்ஸ் பிரிவில் 7 முறையும் வெற்றி பெற்றுள்ளார்.
3 மணி நேரத்திற்கு முன் ஹார்ட்ஃபுல்னெஸ் சென்டரில் உலக தியான விழா. போட்டியின் 2வது நாள் ஆட்டத்திற்கு கார்ல்சன் ஜீன்ஸ் அணிந்து வந்தார். இது சர்வதேச செஸ் கூட்டமைப்பு விதிகளை மீறுவதாகும்.
விதிகளின்படி, போட்டியின் போது வீரர்கள் ஜீன்ஸ் அணியக்கூடாது. போட்டி ஏற்பாட்டாளர்கள் உடைகளை மாற்றுமாறு அறிவுறுத்திய பின்னரும் அவர் கேட்கவில்லை. இதன் காரணமாக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து இன்று (டிச.28) விலகுவதாக கார்ல்சன் அறிவித்தார். இது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.