மும்பை: விராட் கோலியை முந்தி உள்ளார் ரோஹித் சர்மா. எதில் தெரியுங்களா?
ஐபிஎல் தொடரில் அதிக ஆட்டநாயகன் விருதுகள் வென்ற வீரர்களின் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி ரோஹித் சர்மா அசத்தியுள்ளார்.
நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 20-வது ஆட்டநாயகன் விருதை பெற்ற அவர், கோலியை (19) முந்தியுள்ளார். இந்த பட்டியலில் ஏபி டி டிவில்லியர்ஸ்(25), கிறிஸ் கெய்ல்(22) ஆகியோர் முதல் 2 இடங்களை பிடித்துள்ளனர்.
ரோஹித் முதலிடத்திற்கு முன்னேறுவாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.