நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிரான TNPL 2024 தொடரின் 11வது போட்டியில் லைக்கா கிங்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 தொடரின் 8வது சீசன் சேலத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் கட்ட லீக் போட்டி சேலத்தில் நடைபெற்றது. தற்போது 2-வது கட்ட லீக் போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது.
இதில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் லைக்கா கோவை கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான 11வது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் லைக்கா கோ கிங்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய நெல்லை ரோயல் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்களைப் பெற்றது. இதில் கேப்டன் அருண் கார்த்திக் 47 ரன்கள் எடுத்தார். சோனு யாதவ் 43 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லைக்கா கோவா கிங்ஸ் அணி களமிறங்கியது. சாய் சுதர்சன் மற்றும் ஜே.சுரேஷ்குமார் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். சாய் சுதர்சன் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த பாலசுப்ரமணியம் சச்சின், சுரேஷ்குமார் இருவரும் அதிரடியாக விளையாடினர். இதில், பாலசுப்ரமணியம் சச்சின் 48 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என்று 76 ரன்கள் குவித்தார். பின்னர் வந்த கேப்டன் ஷாருக்கான் 7 ரன்களிலும், சுரேஷ் குமார் 63 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் லைக்கா கிங்ஸ் அணி 18.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் லைக்கா கோவை கிங்ஸ் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நெல்லை ராயல் கிங்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.