இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நாளை காலை தொடங்குகிறது. இந்த போட்டியை 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பார்க்க உள்ளனர். இந்த போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட் மற்றும் மழை எச்சரிக்கை எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.
MCG மைதானத்தில் கடந்த 24 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 18 போட்டிகளில் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியும், 2 ஆட்டங்களில் சமநிலையும் கண்டுள்ளது. 2வது நாள் ஆட்டத்திற்கு மட்டும் மழை எச்சரிக்கை இருக்கும், ஆனால் நீடிக்க வாய்ப்பில்லை.
2000 ஆம் ஆண்டு முதல் மெல்போர்ன் மைதானத்தில் 24 போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன, அவற்றில் ஒன்பது பந்துவீச்சைத் தேர்வு செய்யும் அணிகளால் வென்றுள்ளது. 5 நாட்களும் போட்டி நடைபெறுவதால் பிரச்னை இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 12 ஆண்டுகளாக மெல்போர்னில் இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில், இந்த போட்டியின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது